Recent Search Keywords
Finance
Idea
Service
Growth
Plan
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தங்களை இனிதே வரவேற்கிறது
எங்களைப்பற்றி
நோக்கம்
செயல்பாடுகள்
திட்டங்கள்
வேலைநாடுநர்கள் மற்றும் மாணவர்களின் தகுதி, விருப்பம் மற்றும் சமூக பொருளாதார நிலை ஆகியவற்றிற்கு ஏற்ப அவர்களின் இலக்கினை அடைய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.
இவ்விணையதளமானது வேலைநாடுநர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்விடத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வழக்கமான ஆலோசனை நடைமுறைகளோடு புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய ஆலோசனைகளை வழங்குகிறது.
தொழில் நெறி வழிகாட்டுதல், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றின் மூலம் வேலைநாடுநர்களது வேலை பெறும் திறனை உயர்த்துவதே வேலைவாய்ப்பு அலுவலகங்களின் முக்கிய நோக்கமாகும். வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் பணிக்காலியிடங்களுக்கு பதிவு செய்து கொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்தித் தருகின்றன.