Recent Search Keywords
Finance
Idea
Service
Growth
Plan
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தங்களை இனிதே வரவேற்கிறது
எங்களைப்பற்றி
நோக்கம்
செயல்பாடுகள்
திட்டங்கள்
இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதைத் தொடர்ந்து படைக்கலைப்பினால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட போர் வீரர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கத்தோடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் சேவைகள் 1948- ஆம் ஆண்டிலிருந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
1954 – இல் சிவராவ் குழு அறிக்கையில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய தொழில் ஆராய்வு, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை நிலவரத் தகவல் ஆகிய பணிகள் வேலைவாய்ப்புத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜூன் 9, 2014 அன்று இந்திய குடியரசுத் தலைவர் தமது பாராளுமன்ற உரையில், “எனது அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களை தொழில் நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றம் செய்து, நமது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பயனுள்ள முறையில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழியாக வழங்கும் என அறிவித்தார்
இதனைத்தொடர்ந்து, 30.07.2019–இல் வெளியிட்ட அரசாணையின்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றம் செய்யப்பட்டன.