- போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக 1999 – ஆம் ஆண்டு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் உருவாக்கப்பட்டன.
- நாளிதழ்கள், மாத இதழ்கள் மற்றும் பல்வேறு போட்டிதேர்வுகளுக்கான புத்தகங்கள் இம்மையங்களில் பராமரிக்கப்படுகின்றன.
- மாதிரித் தேர்வுகள் மற்றும் மாதிரி நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – I, II, IV / VAO, VIIB & VIII, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் (காவலர் மற்றும் உதவி ஆய்வாளர்), ஆசிரியர் தகுதித் தேர்வு, பணியாளர் தேர்வு வாரியம், வங்கிப்பணியாளர் தேர்வு நிறுவனம் (எழுத்தர், வங்கி உதவி மேலாளர்) மற்றும் இரயில்வே தேர்வு வாரியம் போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
- செவிப்புலன் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டும் விழிப்புலன் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பிரைய்லி முறையிலும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.