Recent Search Keywords
Finance
Idea
Service
Growth
Plan
தன்னார்வ பயிலும் வட்டங்கள்
அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள், தினசரிகள், அத்தேர்வுகளுக்கான தனிப்பட்ட பாடக்குறிப்புகளோடு முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நூலகங்களுடன் கூடிய தன்னார்வ பயிலும் வட்டங்கள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு தேர்வு வாரியங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் இளைஞர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துவதற்கு தன்னார்வ பயிலும் வட்டங்கள் உதவுகின்றன. போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. தன்னார்வ பயிலும் வட்டங்களில் பயின்று வெற்றி பெற்ற மனுதாரர்களை அழைத்து போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் இளைஞர்கள் மத்தியில் ஊக்கமூட்டும் உரைகள் நிகழ்தப்படுகின்றன. தேர்வர்கள், முக்கியமாக கிராமப்புறத்தேர்வர்கள் பயன்பெறும் வகையில், பணியில் இருக்கும் அலுவலர்கள் மற்றும் அனுபவமிக்க வல்லுநர்களைக் கொண்டு மாதிரி தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன.