Recent Search Keywords
Finance
Idea
Service
Growth
Plan
வேலை நிலவரத் தகவல்
வேலை நிலவரத் தகவல் என்பது பல்வகையான வேலைகளின் அமைப்பு, அவ்வேலைகள் ஒவ்வொரு நிறுவனத்திலும் செயல்படும் விதம் மற்றும் அவ்வேலைகளுக்கான கல்வித்தகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு இடத்திலும் தேவைப்படக்கூடிய மனித வளங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய மனித வளங்கள் பற்றிய ஒரு தெளிவான பார்வையை வழங்குவதில் மிக இன்றியமையாத பங்கை ஆற்றுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை நிலவரத் தகவல் அலகு இயங்கி வருகிறது. இவ்வலகுகளின் முக்கியப் பணியாகக் கருதப்படுவது, அம்மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களை அடையாளம் கண்டு ஒவ்வொரு நிறுவனத்திலும் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் விவரங்களைப் பெற்று அவைகளை தொகுத்து வழங்குவதின் மூலம் அம்மாவட்டத்தில் தேவைப்படக்கூடிய மனித வளங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய மனித வளங்கள் பற்றிய மதிப்பீட்டினை வழங்குவதாகும்.
அனைத்து அரசுத்துறை நிறுவனங்களிலும் உள்ள வேலைகள் பற்றிய தரவுகளையும் வேளாண் துறை சாராத தனியார் துறை நிறுவனங்களில் 25 மற்றும் அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் திறன் கொண்ட நிறுவனங்களிலும் உள்ள வேலைகள் பற்றிய தரவுகளையும் கட்டாய காலியிட அறிவிப்புச் சட்டம் 1959-மற்றும் 1960 விதியின் படி பெற்றுத் தொகுக்கப் படுகிறது. இவ்வாறான நடைமுறை காலாண்டுக்கொரு முறை பின்பற்றப்படுகிறது. இவ்வறிக்கைகளின் அடிப்படையில் , ஒரு பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியில் கிடைக்கக்கூடிய மனித வளம், பற்றாக்குறையாக உள்ள மனித வளத்தேவை, பற்றாக்குறையாக உள்ள வேலைகள் மற்றும் அதற்கான படிப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து திட்டங்கள் வகுக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பகுதிக்கான வேலை நிலவரத் தகவல் அறிக்கையும் தயாரிக்கப் பயன்படுகிறது.
வேலை நிலவரத் தகவல் பிரிவின் மூலம் கிடைக்கக்கூடிய முக்கிய பலனானது, ஒவ்வொரு வேலைவாய்ப்பக உயிர்பதிவேட்டில் உள்ள மனித வள விவரத்தினைக் கொண்டு பற்றாக்குறையாக உள்ள மனித வளத்தேவையினை பூர்த்தி செய்வது, எதிர்கால மனித வளத் தேவையினை தொழில்நுட்ப வல்லுநர்,தொழில் நுட்ப உதவியாளர், அறிவியலறிஞர்கள், திறன் படைத்த பணியாளர்கள் என்ற அடிப்படையில் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டம் வகுத்து அதனை செயல்படுத்துவதால் ஒரு பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றுவதாகும்.